News August 6, 2025
திருவாரூர்: விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

தமிழக அரசின் வேளாண் துறையின் மூலம், நீடாமங்கலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் விவசாயிகளுக்கு 20 எக்டேருக்கு மானிய விலை மக்காச்சோளம் சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்கள் வழங்கப்படத் தயார் நிலையில் உள்ளன. எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி மானிய விலையில் இடுபொருட்களைப் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 7, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஆக 6) இரவு 10 மணி முதல் இன்று (ஆக 7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் விபரம் மற்றும் எண்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவல் அலுவர்களை அழைக்கலாம்.
News August 6, 2025
திருவாரூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றறது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் தலைமையில், பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை கோரிக்கை மனுக்களாக அளித்தனர். பின் மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர், மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுமென உறுதியளித்தார்.
News August 6, 2025
திருவாரூர்: கடன் தொல்லையை நீக்கும் வன்மீகநாதர்!

திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தியாராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர்களாக தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இக்கோவில் சென்று மூலவர்களில் ஒருவரான வன்மீகநாதரரை வழிபட்டால், வாழ்வின் கடன் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்க்கை மேம்படுட்டு, பாவங்கள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க..