News November 19, 2025

திருவாரூர் விளையாட்டு அரங்கில் வேலைவாய்ப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு பெண் யோகா பயிற்சியாளர் நியமிக்கபடவுள்ளார். ஆகவே, திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில், வருகிற 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, பெண் யோகா பயிற்சியாளர்கள் 21-ம் தேதி காலை விளையாட்டு அலுவலகத்தில் நேரில் தேர்வில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2025

திருவாரூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News November 19, 2025

திருவாரூரில் தொடரும் மஞ்சள் அலெர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறி இன்றும் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 19, 2025

திருவாரூர்: 8.850 மெட்ரிக் டன் போலி உரம் பறிமுதல்!

image

திருவாரூர் அடுத்த கோமள பேட்டையில் உள்ள தனியார் விற்பனை கூடம் மற்றும் கடையில் உரங்கள் விற்பனை செய்யும் பொழுது, வேளாண்மைத் துறை சார்ந்த அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 8.850 மெட்ரிக் டன் எடையுடைய போலியான உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர். மேலும், போலியான உரங்களை பறிமுதல் செய்து, உரிமையாளர் மீது மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

error: Content is protected !!