News August 16, 2025

திருவாரூர்: விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

சுதந்திர தின தேசிய பண்டிகை விடுமுறை நாளான நேற்று (ஆக.15) திருவாரூர் மாவட்டத்தில், 34 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்; 32 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 66 நிறுவனங்கள் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாமல் பணியில் அமர்த்தியது கண்டறியப்பட்டு, அந்த 66 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக, உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 16, 2025

திருவாரூர்: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி! APPLY

image

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News August 16, 2025

ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

image

திருவாரூர் மாவட்டம் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. பின்பு 2024-25 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி அளித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களால் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News August 16, 2025

திருவாரூர்: குடும்ப வன்முறையா? உடனே CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!