News November 27, 2025

திருவாரூர்: வாய் பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

image

முத்துப்பேட்டையை சேர்ந்த 18 வயது நிரம்பிய வாய் பேச முடியாத மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 23ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தந்தை யார் என்று தெரியாத நிலையில் தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அகல்யா முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுகுணா மர்ம நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றார்.

Similar News

News November 28, 2025

திருவாரூர் மாவட்டத்தில் தடை

image

திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முத்துப்பேட்டை, ஜாம்பவனோடை, செங்காடு, முனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவுறித்துள்ளது.

News November 28, 2025

திருவாரூர்: மழைக் கால அவசர உதவி எண்கள் வெளியீடு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பொதுமக்கள் கவனத்திற்கு – பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 1077,93456440279,04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அரை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு- 101, எண்களை தொடர்பு கொள்ளவும்

News November 28, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

image

வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 8.12.2025 காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் சான்றிதழ் உடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!