News December 27, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.26) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 27, 2025
திருவாரூர்: பெண் குழந்தை உள்ளதா? APPLY NOW!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
தமிழ் வளர்ச்சி துறை பேரணியை துவங்கி வைத்த ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பேரணியை துவங்கி வைத்தார்.
News December 27, 2025
திருவாரூர்: விபத்தில் சிக்கிய வேன்-19 பேர் காயம்

முத்துப்பேட்டை, கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் சிதம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்ற டூரிஸ்ட் வேன் அங்குள்ள ரவுண்டானாவின் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 6 பெண்கள், 8 ஆண்கள், 5 குழந்தைகள் உட்பட 19 பேர் காயம் அடைந்து சிகிச்சைக்காக அனைவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தற்போது முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


