News February 6, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.5) இரவு 10 மணி முதல், (பிப்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 9, 2026

திருவாரூர்: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News February 9, 2026

திருவாரூர்: தலை நசுங்கி பெண் பலி

image

நாகை மாவட்டம், துளசாபுரத்தை சேர்ந்த நடராஜன் (68). இவர் நேற்று மதியம் தனது மனைவி கலைச்செல்வியுடன் (65) டூவீலரில் திருத்துறைப்பூண்டி அருகே இ.சி.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் கலைச்செவியின் தலையில் பேருந்தின் முன் சக்கரம் ஏறியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 9, 2026

திருவாரூர்: மனைவியிடம் அத்துமீறியவர் அடித்து கொலை

image

திருவாரூர் மாவட்டம், கர்ணாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் (37). ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வந்த இவரிடம் அருள்தாஸ் (40) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலையரசன் மனைவிக்கு அருள்தாஸ் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கலையரசன் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அருள்தாசை தலையில் அடித்ததில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து பெருகவாழ்ந்தான் போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!