News August 25, 2025
திருவாரூர்: ரேஷன் கடை பிரச்சனையா? இத பண்ணுங்க!

திருவாரூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
Similar News
News August 25, 2025
திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

ஆகஸ்ட் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆக.,28-ம் தேதி வியாழக்கிழமையன்று காலை திருவாரூர், மாவட்ட
ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே திருவாரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
திருவாரூர்: கிராம உதவியாளர் பணி-கடைசி வாய்ப்பு

திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் <
News August 25, 2025
திருவாரூர்: ஆற்று சுழலில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே பொதுக்குடியைச் சேர்ந்தவர் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்த கல்லூரி மாணவர் குகன்(18). இவர், நேற்று முன்தினம் மாலை குகன், சேகரை அருகே உள்ள வெண்ணாற்றுத் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஆற்று சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனை அடுத்து, சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தேடியதில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.