News July 10, 2025
திருவாரூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும்.
Similar News
News July 10, 2025
திருவாரூக்கு புதிய திட்டங்கள்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டல் வருகை தந்த தமிழக முதல்வர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டர். அதில், ஜூபிலி மார்க்கெட் பகுதியில் ரூ.11 கோடியில் வணிக வளாகம், வண்டம்பாளையம் ஊராட்சியில் ரூ.56 கோடியில் மாவட்ட மாதிரி பள்ளி, மன்னார்குடியில் ரூ.18 கோடியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் ரூ.43 கோடியில் ஆறுகள் வாய்க்கால்கள் புனரமைப்பு, பூந்தோட்டத்தில் புறவழிச்சாலை மற்றும் நெல் ஜெயராமன் சிலை வைக்கப்படுமென அறிவித்தார்.
News July 10, 2025
கல்லூரி மாணவர்களுக்கான விடுதியை முதல்வர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதிக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நேற்றைய தினம் திருவாரூர் வந்த முதல்வர் இன்று ஆய்வுக்குப் பிறகாக அரசு விழாவில் உரையாற்றி விட்டு திருச்சி விமான நிலையம் புறப்பட்டார்.
News July 10, 2025
சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW