News April 24, 2025

திருவாரூர்: ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட தேதி நாளையுடன் (ஏப்.25) முடிவடைகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். எனவே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

Similar News

News April 25, 2025

திருவாரூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News April 25, 2025

திருவாரூர்: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் <>அதிகாரப்பூர்வ இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 25, 2025

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-இளைஞர் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில், 7 வயது சிறுமி ஒருவர் அவரது தாய்மாமன் வீட்டில் தங்கி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆம்பூர் பெரிய காலனி தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(28) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேசை கைது செய்தனர்

error: Content is protected !!