News January 1, 2026
திருவாரூர்: ரயில் மோதி சிதைந்த உடல்

முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் மீனவர் வீரமுத்து (55) என்பவர் நள்ளிரவு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல, அப்பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற ரயில் மோதி உடல் சிதைந்து உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற திருவாரூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
திருவாரூர்: 24 பேருக்கு ரூ.33 லட்சம்!

மன்னார்குடி உதவி ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட 24 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் தொழில்துறை அமைச்சர் கலந்துகொண்டு, தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி உள்ளிட்ட ரூ.33 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
News January 23, 2026
திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டு போட்டிகள் ஜன.25 முதல் பிப்.8 வரை நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 16 முதல் 35 வயது வரையிலான வீரர்-வீராங்கனைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்குபெற <
News January 23, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


