News November 25, 2025
திருவாரூர்: ரயில்வேயில் வேலை.. தேர்வு கிடையாது

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியின் வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News November 28, 2025
திருவாரூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காணும் வகையில் வரும் டிச.,4-ம் தேதி அன்று திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதில் தகுதி உடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருவாரூர்: பாதுகாப்பு பெட்டக வைத்து கொள்ள அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசரகால பெட்டகம் ஒன்றை கையோடு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலர் உணவுகள், மாற்று ஆடைகள், டார்ச் மற்றும் உதிரி பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, அத்தியாவசிய மருந்துகள், குடை முதலியவற்றையும், மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் செல்ல பாலித்தீன் பை உள்ளிட்டவற்றை பாதுகாப்பு நடவடிக்கையாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 28, 2025
BREAKING திருவாரூர்: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். SHARE NOW!


