News October 14, 2025

திருவாரூர்: மின்னல் தாக்கி சிபிஎம் நிர்வாகி பலி

image

நன்னிலம் வட்டம், மருதவாஞ்சேரி பகுதியில் நேற்று (அக்.13) கனமழை பெய்தது. அப்போது வயலில் விதை தெளிப்பு பணியில் ஈடுபட்டிருந்த குடவாசல் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.அன்பழகன் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், தொடர்ச்சியாக விசாரணை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 14, 2025

திருவாரூர்: பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!

image

முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு முனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நளாயினி (48). இவர் தனது ஸ்கூட்டியில் நேற்று கடைதெருவில் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது, வழியாக முனங்காடு நோக்கி சென்ற தனியார் மினி பேருந்து மோதி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த முத்துப்பேட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 14, 2025

திருவாரூர்: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!

News October 14, 2025

திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!