News December 1, 2025

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி!

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கண மழை பெய்தது. மற்றும் டிட்டா புயல் எதிரொலி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் சம்பா, மற்றும் தாளடி, நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனை கணக்கெடுக்கும் பணி வருவாய்துறை மற்றும் வேளாண் துறை சார்பில் இன்று (டிச 1) தொடங்கும் என மாவட்ட வேளாண்மை இணைய இயக்குனர் பால சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

திருவாரூர்: வாலிபரை தாக்கியவர் கைது!

image

நீடாமங்கலம் அருகே காளாஞ்சிமேடுவைச் சேர்ந்தவர்கள் செல்வம் (31), ராஜேஷ் கண்ணன் (30). இருவருக்கும் இடையே 6 மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின் போது பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் உருவாகியுள்ளது. இந்நிலையில் செல்வத்தை ராஜேஷ் கண்ணன் திருப்புளியால் குத்தியுள்ளார் இதில் காயமடைந்த செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

News December 1, 2025

திருவாரூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 30) இரவு 10 மணி முதல் நாளை (டிசம்பர் 1) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!