News September 27, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை பணி நடைபெறுகிறது. இதனிடையில் அறுவடை இயந்திரங்கள் வைத்திருப்பவர்கள் ஏக்கருக்கு ரூ.2500 முதல் ரூ.3000 வரை விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக வாடகை வாங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், கூடுதல் தொகை வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 10, 2026
திருவாரூர்: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

திருவாரூர் மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இத எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 10, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3,75,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம், நன்னிலம் உள்ளிட்ட 120 நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
News January 10, 2026
திருவாரூர்: பற்றி எரிந்த கூரை வீடு!

கோட்டூர் அருகே, ஒரத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரா(38). கணவனை இழந்த இவர் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்ந்லையில் நேற்று முன்தினம் மாலை இவர் கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக வீட்டு கூரையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. சந்திராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் சந்திராவை மீட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் கூரைவீடு முற்றிலும் எரிந்து சேதமானது.


