News December 18, 2025
திருவாரூர் மாவட்ட அதிகார மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

திருவாரூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள 2 கணினி இயக்குபவர்கள் பணியிடத்திற்கு தற்காலிகமாக மாதம் ரூ.20,000 ஒப்பந்த அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் 5.01.2026-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
திருவாரூர்: பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

திருவாரூரில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி வீட்டிலிருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அதே பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த கொத்தனாராக வேலை செய்து வரும் ஸ்ரீதர் (44) என்பவரும் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் அந்த மாணவிக்கு ஸ்ரீதர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீதரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
News December 19, 2025
திருவாரூர் மாவட்ட அதிகார மையத்தில் வேலை

திருவாரூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள 2 கணினி இயக்குபவர்கள் பணியிடத்திற்கு தற்காலிகமாக மாதம் ரூ.20,000 ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் 05.01.2026-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News December 19, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!


