News August 29, 2025
திருவாரூர் மாவட்டம் உருவான கதை

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW
Similar News
News August 29, 2025
திருப்பதி ரயிலில் 2 அடுக்கு இருக்கை வசதி!

மன்னார்குடி டூ திருப்பதி விரைவு ரயிலில் (வண்டி எண் 17407 மற்றும் 17408) செப்டம்பர் 4-ம் தேதியிலிருந்து இரண்டடுக்கு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி 3 அடுக்கு ஏசி பெட்டிகள் இரண்டு; படுக்கை வசதி பெட்டிகள் மூன்று; இருக்கை வசதி பெட்டிகள் ஆறு; 2 ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 11; சரக்குப்பெட்டிகள் இரண்டு இணைக்கப்பட்டிருக்கும் என தென்னக ரயில்வே அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
திருவாரூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 29, 2025
அரசு தொடக்கபள்ளியில் குறுவள மைய கலை திருவிழா

கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம் அரசு தொடக்கப்பள்ளியில் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்,இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தலைமையிலும், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பாபி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் முன்னிலையிலும் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.