News December 20, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 229.80 மில்லி மீட்டர் மழை

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி, கோட்டூர், ராயநல்லூர், விக்கிரபாண்டியம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்ற நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 229.80 மில்லி மீட்டர் மழை பதிவு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Similar News

News March 3, 2026

திருவாரூர் மாவட்டத்தில் 222 பேர் ஆப்சென்ட்

image

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 02) தொடங்கியது. இதற்கு 6045 மாணவர்கள் 7223 மாணவிகள் என 13268 பேர் 61 தேர்வு மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில் 5941 மாணவர்கள் 7105 மாணவிகள் என 13046 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மொத்தம் 222 மாணவ-மாணவிகள் நேற்று தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 3, 2026

திருவாரூர்: மாமனாரை தாக்கிய மருமகன் கைது

image

நடுவக்களப்பாலை சேர்ந்த அனுப்ரியா. இவரது கணவர் ரமேஷுக்கு குடி பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று அனுப்பிரியாவின் தந்தை லட்சுமணன் ஏன் குடித்துவிட்டு சண்டை போடுகிறாய் என ரமேஷை கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரமேஷ் அருகில் கிடந்த கம்பியால் லட்சுமணனை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த புகாரின் பேரில் களப்பால் போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

News March 2, 2026

திருவாரூர்: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? RBI விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் செய்து <<>>புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!