News September 30, 2025
திருவாரூர் மாவட்டத்தில் நாளை புதிய பேருந்து நிலையம் திறப்பு

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு பழைய தஞ்சை சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நகர பேருந்து நிலைய கட்டடத்தினை தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (01.10.2025) காலை திறந்து வைக்கிறார். இதில் தொழில்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
திருவாரூர்: பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வர்த்தக சங்க பொருளாளர் டி.ஜெயசெல்வம் திமுகவில் இருந்து விலகி தன்னை பாஜகவில் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் இணைத்து கொண்டார். அதனைத் தொடர்ந்து புதிதாக இணைந்த ஜெயசெல்வத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் செல்வம் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
News March 4, 2026
திருவாரூர்: காரில் குட்கா பொருள்கள் கடத்திய இருவர் கைது!

நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். நகர் இருவழிச்சாலையில் வேகமாக வந்த காரை மடக்கி விசாரித்தனர். காரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் (28), குஜராத்தைச் சேர்ந்த சோமாபாய் (25) இருந்தனர். மேலும் காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 320 கிலோ இருந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.
News March 4, 2026
திருவாரூர்: மனைவியை எரித்த கணவர்!

சித்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்.28 இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனைவியின் உடலில் மன்னனை ஊற்றி ஐயப்பன் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ஜெயசித்ரா மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், பெருகவாழ்ந்தான் போலீசார் ஐயப்பனை கைது செய்துள்ளனர்.


