News August 12, 2025
திருவாரூர் மாவட்டத்தில் 4 வாலிபர்கள் பலி!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வில்லியநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (30), ஜெயக்குமார் (30), மணிகண்டன் (30) மற்றும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள முதல்கட்டளை பகுதியைச் சேர்ந்த மணிவேல் (28) ஆகிய நான்கு பேரும் நேற்று (ஆக.11) கீழ்குடி தடுப்பணை பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 21, 2025
திருவாரூரில் ஏர்போர்ட் அமைக்க எம்பி வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் விமான நிலையம் அமைக்கக் வேண்டும் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திருவாரூரில் ஏர்போர்ட் அமைத்தால் டூரிஸ்ட் பகுதிகளான வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல வசதியாக அமையும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
News December 21, 2025
திருவாரூர்: சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்த எம்பி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவினைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வீதிகள் தோறும், பொதுமக்களிடம் நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, இன்று மன்னார்குடி நகரத்தின் சார்பில் கீழப்பாலத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் வி.எம். கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News December 21, 2025
திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

திருவாரூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <


