News April 8, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக இன்று (ஏப்.08) திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழையா கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 11, 2025

திருவாரூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

டெல்லி செங்கோட்டையில் நேற்று கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததை ஒட்டி, திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவாரூர் ரயில்வே போலீசார், ரயில்வே படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆகியோர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் பயணிகளின் உடமைகள், ரயில் நிலையத்தின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை சோதனை செய்தனர்.

News November 11, 2025

திருவாரூர் மக்களே இது முற்றிலும் இலவசம்

image

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், இங்கே <>கிளிக்<<>> செய்து அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

News November 11, 2025

திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

மன்னார்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, நவ.4-ம் தேதி காணவில்லை என மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்ததில், திருநெல்வேலியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிறுமியிடம் பழகி, சிறுமியை நெல்லைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!