News January 9, 2026
திருவாரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.09) மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவித்து, ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 22, 2026
திருவாரூர்: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
திருவாரூர்: ATM-ல் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

திருவாரூர் மக்களே ATM-ல் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.
News January 22, 2026
திருவாரூர்: வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டமானது, மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


