News December 16, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 17, 2025
திருவாரூர்: டிப்ளமோ போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
தமிழக அணியில் திருவாரூர் மாணவர்கள்

திருவாரூரில் அமைந்துள்ள வா சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தட்சிணாமூர்த்தி, ஆறுமுகம் ஆகிய இரண்டு மாணவர்கள் தமிழ்நாடு ஹாக்கி அணிக்காக மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பாராட்டும் விதமாக, நேற்று பள்ளிக்கு வருகை புரிந்த அவர்களை கௌரவிக்கும் வைகையில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு துறை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.
News December 17, 2025
திருவாரூர்: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

திருவாரூர் மக்களே உங்கள் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை. தற்போது,பொதுமக்கள் 94987 94987 என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


