News November 17, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு விடுமுறை?

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று (நவ.17) ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Similar News

News November 17, 2025

திருவாரூரில் மழையா? இதை மறக்காதீங்க!

image

திருவாரூர் மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கப்படும்! SHARE

News November 17, 2025

திருவாரூர்: லீவ் குறித்து கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று (நவம்பர் 17) வழக்கம் போல் செயல்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திற்கு சென்னை வானிலை மையம் இன்று (நவம்பர் 17) கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2025

திருவாரூர்: முதியவர் மீது கார் மோதல்

image

வலங்கைமான் அருகே உள்ள நகரம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி கண்ணன் (60). இவர் கடந்த 13-ம் தேதி அதிகாலை 6 மணி அளவில் பொய்கை பாலம் அருகில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத கார் ஒன்று கண்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இதுகுறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!