News October 26, 2025
திருவாரூர் மாவட்டத்தின் மழையின் அளவு

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் மாவட்டம் முழுவதும் காலை 6 மணி நிலவரப்படி 14 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 26, 2026
திருவாரூர்: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி!

திருவாரூர் மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘<
News January 26, 2026
திருவாரூரைச் சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

குடியரசு தினத்தையொட்டி, 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிருதங்க கலைஞரான பக்தவத்சலம் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசைத்துறையிலும், மிருதங்க கலையிலும் அவர் ஆற்றிய பணிக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
BREAKING திருவாரூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் குடமுழக்கு விழா வரும் ஜன.28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை ஈடுசெய்யும் வகையில் பிப்.7-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 3 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


