News March 30, 2025

திருவாரூர்: மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

image

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!

Similar News

News July 6, 2025

மன்னார்குடி தெப்பத்திருவிழா; கட்டுமான பணிகள் தீவிரம்

image

ஆசியாவிலேயே மிகவும் பெரிய தெப்பக்குளம் என்று போற்றப்படும் மன்னார்குடி ஹரித்ராநதி குளத்தில் வருகின்ற ஜூலை 10ம் தேதி இராஜகோபால சுவாமி கோயில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தெப்பம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர் இந்த திருவிழாவை உபயமாக ஏற்று செய்து வருகின்றனர்.

News July 5, 2025

திருவாரூர்: ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 5, 2025

திருவாரூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

“மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 11 காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அவர்களது நலத்திட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் எழுத்துப்பூர்வமான மனுக்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!