News May 17, 2024
திருவாரூர்: மாணவிக்கு உடனடி மின் இணைப்பு வசதி

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி சேர்ந்த மாணவி துர்கா தேவி 10 ஆம் வகுப்பு தேர்வில் 492 மதிப்பெண் எடுத்து மாவட்டத்திலே இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவரது இல்லத்திற்கு மின்சார இணைப்பு இல்லை என்ற அறிந்தவுடன் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் மாணவி துர்காதேவி நன்றி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
திருவாரூரில் சுனாமி ஒத்திகை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட முத்துப்பேட்டை, தொண்டிய காடு மற்றும் இடும்பாவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று(செப்.4) காலை முதல் சுனாமி ஒத்திகை நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News September 3, 2025
திருவாரூர்: நைட் ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.3) இரவு 10 மணி முதல் நாளை(செப்.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 3, 2025
திருவாரூர் மக்களே.. மின்வாரியத்தில் வேலை! APPLY NOW!

திருவாரூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் <