News November 5, 2025

திருவாரூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், 2025-2026ஆம் ஆண்டிற்கான மாணவர்களுக்கு உடற்தகுதி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அறிஞர் அண்ணா மாரத்தான் நெடுந்தூர ஓட்டப்பந்தயம் திருவாரூரில் வருகின்ற நவம்பர் 7-ம் தேதி காலை 6 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 5, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சல் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

திருவாரூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். மற்றவர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க…

News November 5, 2025

தலைநகராக விளங்கிய திருவாரூர்!

image

தமிழக வரலாற்றில் திருவாரூர் மாவட்டம் மிக முக்கிய பகுதியாகும். இது முற்கால சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் (ஆரூர், ஆவூர், வல்லம், குடவாயில், அழுந்தூர்) ஒன்றாகவும், அதன் பின் வந்த மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் ஐந்து இடங்களில் (ஆரூர், கருவூர், உறையூர், சேய்ஞலூர், புகார்) ஒன்றாகவும் விளங்கியது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நமது ஊரை பற்றி அனைவருக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!