News May 11, 2024
திருவாரூர் மழைக்கு வாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
Similar News
News July 7, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 54 நகர்ப்புற முகாம்கள் 131 ஊரக முகாம்கள் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெற உள்ளன. ஜூலை 15 திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி வட்டத்திலும்; ஜூலை 17ஆம் தேதி நன்னிலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், கூத்தாநல்லூர், பேரளம் பகுதியில் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
News July 7, 2025
திருவாரூர்: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி, தஞ்சை உட்டபட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <
News July 7, 2025
திருவாரூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய நவீன காலத்தில் அரசின் நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <