News January 16, 2026

திருவாரூர்: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டிட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News January 26, 2026

திருவாரூர்: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி!

image

திருவாரூர் மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘<>இங்கே கிளிக்’<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News January 26, 2026

திருவாரூரைச் சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

image

குடியரசு தினத்தையொட்டி, 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிருதங்க கலைஞரான பக்தவத்சலம் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசைத்துறையிலும், மிருதங்க கலையிலும் அவர் ஆற்றிய பணிக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2026

BREAKING திருவாரூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் குடமுழக்கு விழா வரும் ஜன.28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை ஈடுசெய்யும் வகையில் பிப்.7-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 3 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!