News December 31, 2025
திருவாரூர்: மகள் கண்முன்னே தந்தை பலி

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள மாணிக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் சந்தோஷ் ராஜன் (52). இவரும், இவரது மகள் லென்சி பிளசி(22) இருவரும் நேற்று முன்தினம் டூ-வீலரில், தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாமந்தான் காவிரி பாலம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் சந்தோஷ்ராஜன், அவரது மகளின் கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் படுகாயம் அடைந்தார்.
Similar News
News December 31, 2025
திருவாரூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
திருவாரூர்: பஸ் பாஸ் விண்ணப்பிக்க அறிவிப்பு

திருவாரூர், மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக அரசின் நகரப் பேருந்துகளில் கட்டண சலுகைகள் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வைத் திறன் குறைபாடு உடையோர் மற்றும் வேலை, கல்வி, மருத்துவ தேவைகளுக்காக பயணிக்கும் பிற மாற்றுத்திறனாளிகள் https://www tnesval.tn.gov.in/edistrict என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பித்துப் பெறலாம் என மாவட்ட ஆட்சியரகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.30) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


