News December 3, 2025
திருவாரூர்: போஸ்ட் ஆபிஸ் வங்கியில் வேலை

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் JUNIOR ASSOCIATE / ASSISTANT MANAGER பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 309
3. வயது: 20-35
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5.கடைசி தேதி: 08.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News December 4, 2025
திருவாரூர்: மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரன் கிராமத்தில் டிட்வா புயல் காரணமாக, தொடர்ந்து பெய்த கனமழையின் காரணத்தினால் சவளக்காரன், மேலநாலாநல்லூர், கீழநாலாநல்லூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் மழையில் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகளை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்தனர்.
News December 4, 2025
திருவாரூர்: சிறப்பு குறை தீர்க்கும் முகாம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று (4-12-2025) காலை 11 மணியளவில் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான நலத்திட்ட உதவிகள், தேவை எனில் மனுக்களை இந்த முகாமில் தரலாம்.” என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், மழைக்காலங்களில் வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, “மழை பொழியும்போது வாகனங்களில் செல்லும் ஓட்டுநர்கள் சாலையில் முன் செல்லும் வாகனத்திற்கு போதிய இடைவெளி விட்டு செல்ல வேண்டும்; தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பெரும் பள்ளங்கள் இருக்கலாம் எனவே அப்பகுதியில் வாகனங்களை ஓட்ட வேண்டாம்.” உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.


