News November 8, 2025
திருவாரூர்: பெண்ணை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்(33). எலக்ட்ரீசனான இவர் மீது. பெண் ஒருவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் தினேஷ் அழைத்து விசாரித்த போது, அவர் சமுக வளைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News November 8, 2025
திருவாரூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233174>>பாகம்-2<<>>)
News November 8, 2025
திருவாரூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..
News November 8, 2025
திருவாரூர்: ஆட்சியர் அறிவித்த சிறப்பு போட்டிகள்!

திருவாரூர், மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரீல்ஸ், கட்டுரை, குறும்படம், விழிப்புணர்வு முழக்கம், வினாடிவினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற இருப்பதால் போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை டிசம்பர் 5க்குள் 9498042408 என்ற whatsapp எண்ணில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


