News December 29, 2025
திருவாரூர்: புகையிலை விற்பனை-ஒருவர் கைது!

திருமக்கோட்டை அருகே உட்காடு தென்பரையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மளிகை கடையில் சோதனை செய்தனர். இதில் அந்த கடையில் ரூ.50,000 மதிப்பிலான 13 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து உட்காடு சாகுல் அமீது (55) என்பவரை கைது செய்தனர்.
Similar News
News February 17, 2026
திருவாரூர்: வீட்டில் இருந்தே மாதம் 9,000 சம்பாதிக்கலாம்!

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News February 17, 2026
திருவாரூர்: SBI வங்கி வேலை-APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 17, 2026
திருவாரூர்: கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு!

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடையைச் சேர்ந்த ஜெய்சங்கர் (50). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் டீ கடை நடத்தி வரும் காமராஜ் (45) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜெய்சங்கரை அரிவாளால் காமராஜ் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை, முதுகு, கால் உள்ளிட்ட பகுதியில் வெட்டுப்பட்டுப் பலத்த காயம் அடைந்த ஜெய்சங்கர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


