News January 9, 2026
திருவாரூர்: பில்லி சூனியம் நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற கூத்தனூர் மகா சரசுவதி திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் ஏவல், பில்லி, சூனியம், தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News January 10, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3,75,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம், நன்னிலம் உள்ளிட்ட 120 நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
News January 10, 2026
திருவாரூர்: பற்றி எரிந்த கூரை வீடு!

கோட்டூர் அருகே, ஒரத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரா(38). கணவனை இழந்த இவர் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்ந்லையில் நேற்று முன்தினம் மாலை இவர் கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக வீட்டு கூரையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. சந்திராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் சந்திராவை மீட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் கூரைவீடு முற்றிலும் எரிந்து சேதமானது.
News January 10, 2026
திருவாரூர்: ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.9) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


