News September 12, 2025

திருவாரூர்: பறவைகளை வேட்டையாடிய இருவர் கைது

image

முத்துப்பேட்டை உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலய பகுதியான பள்ளியமேடு செல்லும் வழியில் வனக்காப்பாளர் பாரதி செல்வன் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணி மேற்கொள்ளும் பொழுது, அப்பகுதியில் பறவையை வேட்டையாடிய எடையூர் சங்கேந்தியைச் சேர்ந்த கோபி, ஜீவா ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து வனச்சரக அலுவலர் முன் ஆஜர் படுத்தி இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News September 12, 2025

திருவாரூர் இளைஞர்களே RBI வங்கியில் வேலை

image

திருவாரூர் மக்களே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! RBI இந்திய ரிசர்வ் வங்கி (Officers) பணிகளை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? உடனே Register பண்ணுங்க!

⏩துறை: இந்திய ரிசர்வ் வங்கி
⏩பணி: Officers
⏩மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩மொத்தம் பணியிடங்கள்: 120
⏩வயது வரம்பு: 30-க்குள்
⏩கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 12, 2025

திருவாரூர்: இறால் பண்ணைகளில் ஆய்வு

image

முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி, தில்லைவிளாகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யோகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, உத்தரவின் பேரில் வழக்கறிஞர் ஆணையர் பிரவீன்ராஜ் தலைமையில் குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்த நிலையில், நேற்று 2-வது நாளாக ஆய்வு செய்தார்.

News September 12, 2025

திருவாரூர்: முன்னால் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆலோசனை

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் வேலங்குடி ஊராட்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னால் உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்துகொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

error: Content is protected !!