News November 1, 2025
திருவாரூர்: பணியில் இருந்த எஸ்.ஐ உயிரிழப்பு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படையில் கந்தா்வகோட்டை வீரப்பட்டி பகுதியைச் சோ்ந்த வீராச்சாமி (48) உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ஊா்க்காவல் படை அலுவலகத்தில் இரவு நேரப் பணியில் இருந்த வீராச்சாமி, உட்காா்ந்த நிலையிலேயே உயிரிழந்து கிடந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரது சடலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
Similar News
News November 1, 2025
திருவாரூர் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

மன்னாா்குடி 7-ஆம் எண் வாய்க்கால் பகுதியைச் சோ்ந்தவர் ரவி என்பவருக்கும் சுந்தரக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்த ருண்குமாா் (27) என்பவருக்கும் இடைய கடந்த வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வருண்குமாா், நள்ளிரவு மீண்டும் ரவி வீட்டிற்கு வந்து பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் வருண்குமாரை மன்னார்குடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
News November 1, 2025
திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என திருவாரூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (31.10.2025) திருவாரூர் நகர காவல்நிலையம், மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். இதில் பொதுமக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லுறவு குறித்தும், இணையவழி பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கி சென்றனர்.


