News April 25, 2025

திருவாரூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

Similar News

News April 25, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.25) மாலை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மாலை நேரத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

News April 25, 2025

பின்னவாசல்: குளத்தில் மூழ்கி மாணவன் பலி

image

திருவாரூர் மாவட்டம், பின்னவாசல் அருகே பிச்சைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் சத்தியசாய் பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்ற சத்தியசாய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 25, 2025

திருவாரூர்: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் <>அதிகாரப்பூர்வ இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!