News November 15, 2025

திருவாரூர் பட்டதாரிகளுக்கு சிறப்பு வாய்ப்பு!

image

மீன்வளம் & மீனவர் நலத்துறை, சென்னை அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் & உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு பிரத்தியேக குடிமைப் பணி பயிற்சி வழங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்ட மீனவ இளைஞர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News November 15, 2025

திருவாரூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> நாளைக்குள்ளாக (நவ.16) விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 15, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

TNPSC-யால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் நவ.16 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இதில் 170 தேர்வர்கள் எழுத உள்ளனர். கொல்லுமாங்குடி ஏழுமலையான் கல்லூரி, நாகக்குடி மத்திய பல்கலைக்கழகம் ஆகிய மையங்களில் நடைபெறவுள்ளது. இதனால் கூடுதல் பேருந்து இயக்கப்படும் எனவும் தேர்வர்கள் 9 மணிக்குள் தேர்வறைக்கு செல்ல வேண்டுமென ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்..

News November 15, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!