News January 13, 2026

திருவாரூர்: நோய் வராமல் காக்கும் அம்மன்!

image

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கென தனிசன்னதி அமைந்துள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் வேர் ஒன்றை உடம்பில் கட்டிக்கொண்டால் நோய்கள் ஏதும் நெருங்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. SHARE பண்ணுங்க.

Similar News

News January 23, 2026

திருவாரூர் தேரை ஆழித்தேர் என்று அழைப்பது ஏன்?

image

ஆழி என்றால் பரந்து விரிந்த என்று பொருள். அதனால் தான், எந்தவிதமான நவீன இயந்திர வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் மனித உழைப்பினால் மட்டும் பரந்து விரிந்த பிரமாண்டமாக செய்யப்பட்ட தேரான திருவாரூர் தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். 1400 ஆண்டுகளுக்கு முன்பே “ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே” என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க…

News January 23, 2026

திருவாரூர்: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த<> லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 23, 2026

திருவாரூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

திருவாரூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!