News January 13, 2026

திருவாரூர்: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

image

திருவாரூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

Similar News

News January 23, 2026

திருவாரூர்: 24 பேருக்கு ரூ.33 லட்சம்!

image

மன்னார்குடி உதவி ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட 24 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் தொழில்துறை அமைச்சர் கலந்துகொண்டு, தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி உள்ளிட்ட ரூ.33 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

News January 23, 2026

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

image

இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டு போட்டிகள் ஜன.25 முதல் பிப்.8 வரை நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 16 முதல் 35 வயது வரையிலான வீரர்-வீராங்கனைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்குபெற <>sdat.tn.gov.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 24-ம் தேதி கடைசி நாளாகும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

News January 23, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!