News January 18, 2026

திருவாரூர்: நடமாடும் உணவகம் அமைக்க மானியம்

image

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!

Similar News

News February 2, 2026

திருவாரூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 2, 2026

திருவாரூர்: சிறையில் கைதி திடீர் உயிரிழப்பு

image

மன்னார்குடி அடுத்த வடுவூரை சேர்ந்தவர் உலகநீதி (58). இவர் வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2021-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த 20-ம் தேதி முதல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 2, 2026

திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கான குடிமைப் பொருட்கள் கொடுப்பதற்கான திட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.‌ அதன்படி இன்று (பிப்.2) மற்றும் நாளை ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!