News September 27, 2025

திருவாரூர்: நகரப் பேருந்து நிலையத்தில் எம்.எல்.ஏ ஆய்வு

image

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ள கலைஞர் திருவாரூர் நகர பேருந்து நிலையத்தினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் திருவாரூர் நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ், நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 7, 2026

திருவாரூர்: கடலில் தவறி விழுந்து சாவு!

image

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சின்னங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (51). மீனவரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை சக மீனவர்களுடன் உப்புக்காடு அருகே வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

திருவாரூர்: 132 மாணவர்களுக்கு விருது

image

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி கல்லூரி விடுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பு கலை, இலக்கியம் & விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 7 கல்லூரிகளைச் சேர்ந்த 421 குழுக்களில் 132 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான கேடயம் & பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

News January 6, 2026

திருவாரூர்: பணி உயர்வு வேண்டுமா? இங்கு செல்லுங்கள்!

image

திருவாரூரில் ஸ்ரீ வாஞ்சிநாதர் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், பணி உயர்வு, திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!