News November 1, 2025

திருவாரூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

திருவாரூர் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு கிளிக் செய்து நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

Similar News

News November 1, 2025

திருவாரூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco<<>>.net என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News November 1, 2025

திருவாரூர்: சிறப்பு ரயில் இயக்கம்

image

முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் நவ.2-ம் தேதி, எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் முத்துப்பேட்டையில் அதிகாலை 2.38 மணியளவில் நின்று செல்லும். அதுபோல மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து நவ.4-ம் தேதி புறப்படும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் முத்துப்பேட்டையில் இரவு 8.53 மணிக்கு நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 1, 2025

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்

image

உலக பிரசித்தி பெற்ற முத்துப்பேட்டை சேக்தாவூது ஆண்டவர் தர்காவில் 724-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா மற்றும் புனித சந்தனக் கூடு வைபவத்தை முன்னிட்டு கலெக்டர் மோகனசந்திரன் உத்தரவின் பேரில், முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவானோடை பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!