News January 4, 2026

திருவாரூர்: தீராத நோய்களை தீர்க்கும் கோயில்

image

வலங்கைமான் வட்டம், நரிக்குடியில் எமனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் எம தர்மராஜாவுக்கென அமைந்துள்ள சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள ஊற்றில் சுரக்கும் நீரை பருகினால் தீராத நோய்களும் உடனடியாக குணமாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் பிதுர்தோஷம் நீங்க, துர்மரணம் ஏற்படாமல் இருக்கவும் பக்தர்கள் இத்தலத்தில் தரிசனம் செய்கின்றனர். SHARE IT.

Similar News

News January 5, 2026

திருவாரூர்-காரைக்கால் ரயில் சேவை ரத்து

image

திருவாரூர், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

திருவாரூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!

News January 5, 2026

திருவாரூர் மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆதார் மையங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூரில் ஜன.11 அன்றும், கூத்தாநல்லூரில் ஜன.18 அன்றும், நீடாமங்கலத்தில் ஜன.25 அன்றும் நடைபெற உள்ளது. ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்து பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!