News October 21, 2025
திருவாரூர் தியாகராஜர் கோயில் மழை வெள்ளம்!

திருவாரூர் மாவட்டத்தில் அக்.19 காலை 10 மணியளவில் தொடங்கி 2 மணி நேரம் பலத்த மழை வெளுத்து வாங்கியது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஒட்டிகள் சற்று சிரமப்பட்டனர். மேலும், பலத்த மழையினால் திருவாரூர் தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுர வாசல் 2வது பிரகாரம் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
Similar News
News October 21, 2025
திருவாரூர்: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News October 21, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News October 21, 2025
திருவாரூர்: பருவமழை பாதிப்பு எண்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பருவமழை பாதிப்பு குறித்தான புகார்களை உடனடியாக தெரிவிக்க 043661077 & 04366 226623 என்ற எண்களையும் அல்லது 9043989192 & 9345640279 என்ற WhatsApp எண்களையும் தொடர்பு கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.