News April 22, 2025
திருவாரூர்: தமிழில் பெயர்ப் பலகை வைக்க காலக்கெடு நிர்ணயம்

தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டாயம் தமிழில் பெயர்ப் பலகை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் வரும் மே.15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைத்திட வேண்டும் என திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். தவறும் பட்சத்தில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE !
Similar News
News April 22, 2025
திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஏப்.25ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 8th முதல் டிகிரி, ITI, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் பங்கேற்கலாம். இந்த <
News April 22, 2025
முத்துப்பேட்டை அருகே தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சாம்பல்

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது குடிசை வீடு நேற்றிரவு திடீரென்று தீ பிடித்து எரிய துவங்கியது. தகவல் அறிந்து அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர். ஆனாலும் வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் கருகி நாசமானது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 21, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (21.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது 7 ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும். அனைவருக்கும் Share செய்து பயனடைய செய்யுங்கள்.