News January 8, 2026
திருவாரூர்: டாஸ்மாக் ஊழியர் போக்சோவில் கைது

குடவாசல் அருகே ஒரு அரசு மதுபான கடையில் வேலை பார்ப்பவர் மாறன் (52). இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை, தனது வீட்டுக்குள் அழைத்துள்ளார். அதன்பின் அந்த சிறுமிக்கு மாறன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாறனை கைது செய்துள்ளனர்.
Similar News
News January 20, 2026
திருவாரூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனிக்க

திருவாரூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 20, 2026
திருவாரூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவாரூர் கோட்டத்தில் மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 22-ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு திருவாரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 20, 2026
திருவாரூர்: 10th போதும்-சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700 – ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


