News December 17, 2025

திருவாரூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

Similar News

News December 20, 2025

திருவாரூர்: தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்

image

நீடாமங்கலம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் பட்டியல் இனத்தவர்களுக்கான துணை திட்டத்தின் அடிப்படையில் நெடும்பலம் கிராம விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு மற்றும் வர்த்தக நோக்கில் தேன் உற்பத்தி செய்ய புதிய உத்திகள் குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. தேன் அறுவடை சுத்திகரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் செய்வது குறித்து பயிற்சியாளர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி செய்தனர்.

News December 20, 2025

திருவாரூர்: வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதியில் 2,86,973 வாக்காளர்களில் 2,49,036 வாக்காளர்களுக்கு பதிவேற்றம் செய்யப்பட்டது. முகவரி இல்லாதவர்கள் 7,528 பேர்; இறப்பு 13,251 பேர்; இரட்டை பதிவு 1,533 பேர்; இடம் பெயர்ந்தவர்கள் 15,530 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 20, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!