News November 1, 2025
திருவாரூர்: சிறப்பு ரயில் இயக்கம்

முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் நவ.2-ம் தேதி, எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் முத்துப்பேட்டையில் அதிகாலை 2.38 மணியளவில் நின்று செல்லும். அதுபோல மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து நவ.4-ம் தேதி புறப்படும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் முத்துப்பேட்டையில் இரவு 8.53 மணிக்கு நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 1, 2025
திருவாரூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 1, 2025
திருவாரூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

திருவாரூர் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு கிளிக் செய்து நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
News November 1, 2025
திருவாரூர் அருகே டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்

உலக பிரசித்தி பெற்ற முத்துப்பேட்டை சேக்தாவூது ஆண்டவர் தர்காவில் 724-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா மற்றும் புனித சந்தனக் கூடு வைபவத்தை முன்னிட்டு கலெக்டர் மோகனசந்திரன் உத்தரவின் பேரில், முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவானோடை பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


