News October 3, 2025
திருவாரூர்: சட்டவிரோத மணல் கடத்தல்-லாரி பறிமுதல்!

திருவாரூர் புவியியல் சுரங்கத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அபிவிருத்தீஸ்வரம் பாலம் அருகே ஒரு லாரியில் சோதனை செய்ததில், நாகையில் இருந்து சவுடு மணல் எடுத்து செல்வதற்கான அனுமதி பெற்று, ஆற்று மணலை ஏற்றி சென்றது தெரியவந்தது. விதிகளுக்கு புறம்பாக அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்ததால் லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர் பெர்னாண்டஸ், டிரைவர் அனிட்டன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News October 3, 2025
திருவாரூர்:அரசு அலுவலங்களுக்கு இனி அலைய வேண்டாம்

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போனில் <
News October 3, 2025
திருவாரூர்: திடீர் மின்தடையா ? இத பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘9498794987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News October 3, 2025
திருவாரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <